Tuesday , 22 January 2019
Home » இந்தியா » மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு

மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு

kமத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் இன்று பதவியேற்க உள்ளார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கமல்நாத் ஒரு மனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், 114 இடங்கள் மட்டுமே பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவானது. இதையடுத்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரின் நிபந்தனையற்ற ஆதரவின் பேரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால் சிந்தியா மற்றும் கமல்நாத் இடையே யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்தது. இது குறித்து காங்கிரஸ் தலைமை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த பின் போபாலுக்கு விமானம் மூலம் வந்த கமல்நாத், பின்னிரவில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். இக்கூட்டத்தில் சிந்தியா மற்றும் ஏ.கே.அந்தோணி, திக்விஜய் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கமல்நாத் ஒருமனதாக புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், தமக்கு ஆதரவு தந்த சிந்தியாவுக்கும் கட்சித் தலைமைக்கும் நன்றி தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய பிரதேசத்தின் எதிர்காலம் ஒளிமிகுந்ததாக இருக்கும் என்றும் உறுதியளித்தார். இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து பதவியேற்புக்கு அழைப்பு விடுக்குமாறு கமல்நாத் கோரிக்கை விடுப்பார். இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் மத்திய தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ள கமல்நாத் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com