Saturday , 16 February 2019
Home » தமிழ்நாடு » மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட விரைவில் அடிக்கல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட விரைவில் அடிக்கல்

2மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வழியில் சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய நிதிக்குழு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவித்தார். பின்னர் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் ,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று அவர் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com