Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, விரைந்து அமைத்து தர கோரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, விரைந்து அமைத்து தர கோரிக்கை!!

modiமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லியில் பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார். அவர்களது சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுதல், சேலத்தின் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கட்டமைப்பது தொடர்பான கோரிக்கைகளும் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தமிழக மக்களை பாதிக்கும் வகையில் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று தெரிவித்த அவர், தினகரனுடனான சந்திப்பு பற்றி துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஏற்கனவே விளக்கமளித்து விட்டார் என்று தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com