Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மண்டிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை,82 ஆயிரம் பணம் கொள்ளை. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருச்சிராப்பள்ளி » மண்டிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை,82 ஆயிரம் பணம் கொள்ளை.

மண்டிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை,82 ஆயிரம் பணம் கொள்ளை.

vlcsnap-2018-07-24-11h06m58s328திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சித்தகுடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் (61) இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மண்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருக்கடையூருக்கு தனது அறுபதாம் கல்யாணத்திற்காக சென்றார். இந்நிலையில் வீட்டு வேலைக்காரப் பெண் வீட்டிற்கு சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து இதுபற்றி ஜெயச்சந்திரனுக்கு தகவல் அளித்தார்.இன்று மாலை ஊர் திரும்பிய அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 3 அறைகளில் இருந்த பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 58 சவரன் நகை மற்றும் 82 ஆயிரம் ரொக்கப்பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய பின் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றனர்.
அதிக அளவிலான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணப்பாறை பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com