Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மணல் கடத்திய மாட்டுவண்டியில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » மணல் கடத்திய மாட்டுவண்டியில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!!

மணல் கடத்திய மாட்டுவண்டியில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!!

வேலூvlcsnap-2018-07-02-10h54m25s818ர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்—பத்மா தம்பதியினர் கூலி தொழிலாளியான இவர்களுக்கு சௌமியா சஞ்சய்,சங்கவி என்ற 3 பிள்ளைகள் உள்ளனர் .இந்த நிலையில் 3 வது மகளான சங்கவி அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் .இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள சில்லறை கடைக்கு சைக்கிளில் (மிதிவண்டியில்) சென்று வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த கென்னடி மற்றும் அவரது\ மகன் பிரதாப் ஆகிய இருவரும் பாலாற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி ஊருக்குள் வேகமாக ஒட்டி சென்றுள்ளனர் .அப்போது எதிரே சைக்கிளில் வந்த 11 வயது சிறுமி சங்கவி மீது மாட்டுவண்டி ஏற்றியதில் தடுமாறி கிழே விழுந்த சிறுமி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தாய் கண்முன்னே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார் .இதனை அறிந்த கென்னடி மற்றும் அவரது மகன் பிரதாப் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார் மணல் கடத்தப்பட்ட மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
இது குறித்து மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் தாய் பத்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ; என் கண்முன்னே கார் ஏற்றி கொலை செய்தது போல் என்னுடைய குழந்தை இரத்தம் வழிய, வழிய துடிதுடிக்க இறந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக்கூடாது பாலாற்றில் இரவும் ,பகலும் மணல் கடத்தி ஊருக்குள் வேகமாக மட்டுவண்டிகளை ஒட்டி வருவதாகவும், இதனை தட்டி கேட்க யாரும் இல்லையா ? என கண்ணீர் மல்க அளித்ததை அங்கு பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com