Friday , 16 November 2018
Home » இந்தியா » மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில், தேர்தல் நடத்தும் திட்டம்!!

மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில், தேர்தல் நடத்தும் திட்டம்!!

மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து அரசியல் கunnamedட்சிகளுடன் சட்டக் கமிஷன் இன்று ஆலோசனை நடத்துகிறது. நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேசிய சட்ட ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளிடம் தேசிய சட்ட ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவை நாளை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க தேசிய சட்ட ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனையடுத்து நாளை டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் திமுகவும் தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் என்று கூறப்படுகிறது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா உள்ளிட்ட கட்சிகளும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com