Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மகளிர் கல்லூரி வாகனத்தை வழிமறித்து மாணவிகளை துன்பறுத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மாணவிகள் புகார் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » தர்மபுரி » மகளிர் கல்லூரி வாகனத்தை வழிமறித்து மாணவிகளை துன்பறுத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மாணவிகள் புகார்

மகளிர் கல்லூரி வாகனத்தை வழிமறித்து மாணவிகளை துன்பறுத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மாணவிகள் புகார்

vlcsnap-2018-07-28-10h33m19s437தருமபுரி அருகே சாலையில் வந்த தனியார் மகளிர் கல்லூரி வாகனத்தை வழிமறித்து மாணவிகளை துன்பறுத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடத்தூர் C3 காவல் நிலையத்தில் மாணவிகள் புகார்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அய்யம்பட்டி சாலையில் தனியார் மகளிர் கல்லூரி வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் குடிபோதையில் நின்றுகொணடிருந்த சிங்காரவேலன் என்கிற வாலிபர், கல்லூரி வாகனத்தில் இருந்த மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த மாணவிகள் பேருந்து கண்ணாடிகளை இழுத்து மூடியுள்ளனர்.அய்யம்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து காவேரிபுரத்தை நோக்கி சென்ற கல்லூரி வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சிங்காரவேலன், ஓட்டுநரை தாக்கியுள்ளார், இதனையடுத்து கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தல் செய்து தாக்கியுள்ளார். அப்போது அருகே இருந்த பொதுமக்கள் வன்சீண்டல் செய்த சிங்காரவேலனை பிடித்து கடத்தூர் சி3 காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதுகுறித்து தனியார் மகளிர் கல்லூரி வாகன ஓட்டுநர் ராமர் கொடுத்த புகாரின் பேரில் அந்த வாலிபரை விசாரனை செய்தனர். தங்களை அச்சுறுத்தி துன்புறுத்திய வாலிபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பாதிக்கபபட்ட மாணவிகள் புகார் மனு அளித்துள்ளனர். இது சம்மந்தமாக கடத்தூர் காவல் துறை அந்த வாலிபரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவதால் பெண்களுக்கு எதிரான சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாணவிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com