Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
போலியான எண்ணைப் பயன்படுத்தி இயக்கிய மணல் லாரியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் பறிமுதல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » நாமக்கல் » போலியான எண்ணைப் பயன்படுத்தி இயக்கிய மணல் லாரியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் பறிமுதல்

போலியான எண்ணைப் பயன்படுத்தி இயக்கிய மணல் லாரியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் பறிமுதல்

vlcsnap-2015-03-18-09h28m48s47போலியான எண்ணைப் பயன்படுத்தி இயக்கிய மணல் லாரியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருப்பண்ணன் தலைமையிலான அலுவலர்கள் முதலைப்பட்டி அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெஞ்சாலையில் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற மணல் லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லாரியின் ஆவணங்கள் போலியானவை என்பதுடன், லாரியின் எண்ணும் தவறாக இருந்தது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் வட்டாரப் போக்குவரத்து துறையினர் விசாரணை நடத்தினர். எனினும், அவர் முறையான தகவல்களை வழங்கவில்லை. திருட்டு லாரியாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அலுவலர்கள் லாரியை பறிமுதல் செய்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com