Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருமான வரித்துறை சோதனை …

போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருமான வரித்துறை சோதனை …

poes_3ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. நான்கு நாட்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் முடிவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இரவு  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  பூங்குன்றன், சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு முன்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com