Monday , 23 October 2017
Home » சினிமா » பொறுத்தது போதும் பொங்கி எழு ; விஷால் ஆவேசம் …

பொறுத்தது போதும் பொங்கி எழு ; விஷால் ஆவேசம் …

தமிழ்த் திரைப்படங்களுக்கு இரட்டை வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். முடிவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 10 சதவீத கேளிக்கை வரி என்பது தமிழ்த் திரையுலகிற்கு அதிர்ச்சியான செய்தி.  படங்கள் தயாரித்து, தியேட்டர்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்போது, 40 சதவீத வரியை  அரசாங்கத்துக்குச் செலுத்துவது என்பது முடியாத காரியம். இதனால், நாளை முதல் (6ம்  தேதி) புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம். தமிழக அரசுக்கு மீண்டும்  கோரிக்கை வைத்திருக்கிறோம்.

Vishalஇந்த கேளிக்கை வரியை ரத்து செய்வார்கள் என்ற  நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மற்ற மாநிலங்களில்  ஜிஎஸ்டி வரி மட்டுமே செலுத்துகிறார்கள். சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டியதற்கு தமிழக அரசுக்கு நன்றி சொன்னோம். அதேமாதிரி 10 சதவீத கேளிக்கை வரி  விதித்து, தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டி விடாதீர்கள். இதை தமிழக அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். எங்கள்  கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். இது சம்பந்தமாக தமிழக முதல்வரைச் சந்தித்து இன்று கடிதம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு விஷால் கூறினார். முன்னதாக நடந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தின் முடிவில் பேசிய அபிராமி ராமநாதன்,‘‘கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். எனவே, தியேட்டர்களை மூட மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com