Monday , 17 December 2018
Home » தமிழ்நாடு » பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு செஸ் வரி தான் காரணம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு செஸ் வரி தான் காரணம்

thambiduraபெட்ரோல்,டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசு விதிக்கும் செஸ் வரி தான் காரணம் என கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.கரூர் மாவாட்டம் அரவக்குறிச்சி அருகே மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக தீர்வு கண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, தனிப்பட்ட ஒரு கட்சியை சேர்ந்தவரை குறித்து கருத்து கூறமுடியாது என்றும் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிவித்த அவர், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்த செஸ் வரிதான் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும், தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறும் திறனை அதிமுக கட்சி பெற்றிருக்கிறது என்று தெரிவித்த அவர், கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை என்று தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com