Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » புழல் சிறையில் 8 வார்டன்கள் இடமாற்றம்

புழல் சிறையில் 8 வார்டன்கள் இடமாற்றம்

puzhalசென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசுவாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாரால் 8 வார்டன்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்தமிழத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து புழல் சிறைக்குள் சிறைத்துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, ஆய்வு மேற்கொண்டு புகைப்படங்களில் வெளியான இடங்களை உறுதிப்படுத்தினர். பின்னர் சொகுசு வாழ்க்கை அனுபவித்ததாக அறியப்பட்ட 5 கைதிகளும் வெல்வேறு சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னை புழல் சிறையில் பணிபுரியும் 8 சிறை வார்டன்கள் வெல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக,சிறை வார்டன்களான பாவடைராயர், ஜெபஸ்டின் செல்வக்குமார், சிங்காரவேலன், சுப்ரமணி, செல்வகுமார், பிரதாப் சிங் ஆகிய வார்டன்களும், விஜயராஜ், கணேசன் உள்ளிட்ட தலைமை சிறை வார்டன்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com