Thursday , 20 September 2018
Home » இந்தியா » புதுச்சேரி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும்

புதுச்சேரி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும்

Puducherry cmகேரள மாநிலம் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல்காந்தி கேட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மாகி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரிசி, பருப்பு, மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கேரள மாநில மக்களுக்கு உதவிட உதவிகளை செய்யுமாறு புதுச்சேரி மக்களுக்கு கோரிக்கை வைத்தேன்.பொதுமக்கள் அரிசி, துணிகள், மருந்து, குடிநீர், போர்வை போன்றவற்றை மனமுவந்து தரவேண்டும். எனது அழைப்பினை ஏற்று வர்த்தகர் சங்கம் ரூ.1 லட்சம் தந்தது. நிவாரண பொருட்கள் சேகரிப்பது தொடர்பாக நாளை வியாபாரிகள், தொழில் அதிபர்களை அழைத்து பேசி நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.கேரள மழைவெள்ளம் தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி, நிதி மந்திரியை தொடர்புகொண்டு பேசினேன். அங்கு வெள்ளம் வடிய 3 நாட்கள் ஆகும் என்றனர். அங்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது. அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதேபோல் எம்.பி.க்களும் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள பணத்தை வழங்குவது தொடர்பாக அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com