Thursday , 17 January 2019
Home » தமிழ்நாடு » புதுக்கோட்டை திருமயம் அருகே,லாரியும், வேனும் மோதிக்கொண்ட கோர விபத்து!

புதுக்கோட்டை திருமயம் அருகே,லாரியும், வேனும் மோதிக்கொண்ட கோர விபத்து!

3புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலையில் கண்டெய்னர் லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெம்போ டிராவலர் வேனில் ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேன் புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 7-பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர், திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப்பலனின்றி 3-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கன்டெய்னர் லாரி தவறான பாதையில் வந்து, வேன் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com