Friday , 19 October 2018
Home » மாவட்டம் » புதுக்கோட்டை » புதுக்கோட்டையில் பிரசவத்திற்காக அனுமதிக்கபட்ட பெண் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை

புதுக்கோட்டையில் பிரசவத்திற்காக அனுமதிக்கபட்ட பெண் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை

vlcsnap-2018-06-08-16h39m31s719புதுக்கோட்டையில் பிரசவத்திற்காக அனுமதிக்கபட்ட பெண் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனையை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு பிரசவ வலி எற்பட்டதை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயையும் குழந்தையையும் காண உறவினர்களை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டதையடுத்து மகேஸ்வரி அபாயகட்டத்தில் இருப்பதாக கூறி வேறு ஒரு மருத்துவமனைக்கு தங்கள் செலவவிலேயே அனுமதிக்கிறோம் என கூறியுள்ளனர். இந்த நிலையில் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே மகேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மகேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com