Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டம்! தமிழகத்தில் 4 நாட்கள் முகாம்

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டம்! தமிழகத்தில் 4 நாட்கள் முகாம்

Sandeep-Saxenaபிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கான முகாம்கள் ஏப்ரல் 12 மற்றும் 26, மே 10 மற்றும் 24 ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலை பிழையில்லாமலும், வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இல்லாத அளவுக்கு செம்மைப்படுத்தி, அதன் விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம்; நேற்று தொடங்கியது. இந்த திட்டத்தின் படி, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், தாமாக முன்வந்து அதை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். அதோடு போன் எண், செல்போன் எண், இ–மெயில் முகவரி போன்றவற்றையும் அளிக்கவேண்டும். இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தினார். அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க., இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் மாநிலக் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கான முகாம்கள் ஏப்ரல் 12 மற்றும் 26, மே 10 மற்றும் 24 ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த பணிகள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிடப்பட்ட 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com