Monday , 20 November 2017
Home » Uncategorized » பிலிப்பைன்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு …

பிலிப்பைன்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு …

Modi Trumpபிலிப்பைன்சில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசினர்.

மணிலாவில் 50வது இந்தியா ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இருநாட்டு அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பில் இருநாட்டு பரஸ்பர உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறபடுகிறது.

முன்னதாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் உச்சி மாநாட்டின் துவக்க விழா நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை உலக தலைவர்கள் கண்டு ரசித்தனர்.

இதனிடையே, பிரதமர் மோடி பல நாட்டு முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகள் உடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மோடி பேசவுள்ளார்.

சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com