பிரேசில் நாட்டில் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்குள்ள கர்லோஸ் பிரேட்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று காலை தனிநபர் இயக்கி சென்ற சிறிய ரக விமானம், பெலோ ஹாரிசான்டே குடியிருப்பு பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து, தெரு சாலையில் நின்ற 3 கார்கள் மீது மோதி வெடித்தது.
இந்த கோர விபத்தில் விமான பயணி, பாதசாரி ஒருவர் மற்றும் காரில் இருந்த ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு அல்லது இன்ஜின் பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியாத நிலையில், அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.