Monday , 23 October 2017
Home » சினிமா » பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்

lpkw1xius1fyuejq.D.0.Reema-Lagoo-at-the-launch-of-book-THE-LIVE-WELL-DIET c2nபிரபல இந்தி நடிகை ரீமா லஹூ மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மும்பையில் வசித்து வந்த அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சல்மான் கான் ஹீரோவாக அறிமுகமான ’மைனே பியார் கியா’ படத்தில் அவர் அம்மாவாக நடித்தவர் இவர். தொடர்ந்து சாஜன், வாஸ்தவ், குச் குசி ஹோதா ஹை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளா இவர், ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மறைந்த ரீமா, மராத்தி நடிகர் விவேக் லஜூவை திருமணம் செய்திருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு மிருன்மாயி என்ற மகள் உள்ளார். இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com