Friday , 19 October 2018
Home » இந்தியா » பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

3பிரதமர் நரேந்திர மோடி ஊழல்வாதி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக ரிலையன்சை தவிர வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் சேர்த்துக் கொள்ள இந்தியா தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியிருந்தார். இதே போல், ரிலையன்ஸ் நிறுவனத்தை கட்டாயமாக கூட்டு நிறுவனமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்ததாக டசால்ட் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியும் ரிலையன்சை கூட்டு நிறுவனமாக சேர்க்கும் கட்டாயம் உருவாக்கப்பட்டதாக கூறியிருப்பதன் மூலம் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதையே காட்டுவதாகத் தெரிவித்தார். எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி என்று நாட்டின் இளைஞர்களுக்கு தான் தயக்கம் இன்றி தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com