அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை பிடிக்க, அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான கண்காட்சி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக மைய கட்டிடத்தில், விமானத்தை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 3,000 பேர் பலியாகினர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனை, 10 ஆண்டுகால தேடுதல் வேட்டைக்கு பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவு வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் விளக்கும் வண்ணம் நியூயார்க் நகரில் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த வீட்டின் மாதிரி அமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு கைப்பற்றப்பட்ட சில பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை 15-ம் தேதி துவங்கும் இந்தக் கண்காட்சியானது, வரும் 2021 மே மாதம் வரை நடைபெறவுள்ளது.