Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பிச்சை எடுப்பது தொடர்பாக இரு தரப்பு திருநங்கைகள் இடையேமோதல் !! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » கரூர் » பிச்சை எடுப்பது தொடர்பாக இரு தரப்பு திருநங்கைகள் இடையேமோதல் !!

பிச்சை எடுப்பது தொடர்பாக இரு தரப்பு திருநங்கைகள் இடையேமோதல் !!

vlcsnap-2018-07-06-12h32m45s438கரூர் பேருந்து நிலையத்தில் ஒருதரப்பு திருநங்கைகள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக வசுல் செய்வதாககிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றொருதரப்பு திருநங்கைகள் இவற்றைதட்டிக் கேட்டுள்ளனர். இது தொடர்பாககரூhஸ மாவடியான் கோவில் தெருவில் தங்கியிருக்கும் திருநங்கைகள் 3 பேரைமற்றொரு தரப்பு திருநங்கைகள் தாக்கியதாகவும், அவர்களும் இவர்களை தாக்கியதாகவும் கூறி இரு தரப்பினரும் கரூர் நகரகாவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாகஉள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்று ஒருதரப்பைசார்ந் தவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி கரூர் நகரகாவல் நிலையத்தில் இருக்கும் சகதிருநங்கைகளுடன் விசாரணைக்காக சென்றுள்ளனர். அப்போது அரசுமருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் மற்றொரு தரப்பு திருநங்கைகள் விசாரணைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்குவராமல் இழுத்தடிப்பதாக கூறிகோபமடைந்த திருநங்கைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் திருநங்கைகளை அறையிலிருந்து வெளியில் வரும்படி அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரமறுத்ததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அறையின் கதவை கல்லால் அடித்து உடைத்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்குவந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து நாளை மறு நாள் விசாரணை செய்துதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பெயரில் கலைந்து சென்றனர். திருநங்கைகள் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாக்கிக் கொண்டசம்பத்தால் அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், மருத்துவர்களும், செவிலியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com