Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க மகளீர் மன்றத்தினர் கோரிக்கை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சிவகங்கை » பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க மகளீர் மன்றத்தினர் கோரிக்கை

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க மகளீர் மன்றத்தினர் கோரிக்கை

vlcsnap-2018-07-24-11h29m12s140சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி அருகே உள்ளது அச்சரம்பட்டி. இங்கு வசித்து வருபவர் அழகு. இவரது 17 வயது மகள்தேவி. இவர் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி. கடந்த 10 ம் தேதி தேவியின் தந்தையும், தாயும் கூலி வேளைக்கு சென்று விட்ட நிலையில் தனியா இருந்த தேவியை அருகில் வசிக்கும் பெயின்டர் மாணிக்கம் (27) பாலியல் வன்புனர்வு செய்து, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு அருகில் உள்ள புதரில் சிறுமியில் உடலை போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குற்றவாளி மாணிக்கத்தை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளி மாணிக்கம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமையால் செய்துள்ளதாகவும், ஜாமினில் குற்றவாளி வெளியே வந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே குற்றவாளி மாணிக்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சட்டப்படி தூக்கு தண்டனை வழங்க கோரி கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள், கிராம மகளீர் மன்றம் சார்பாக 50 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணிக்கம், சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பெண்களிடம் குற்றசெயல்களில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது குறிப்பிடதக்கது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com