Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பாதாள அறையில் 9 ஆண்டுகளாக வசித்து வந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் மீட்பு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » உலகம் » பாதாள அறையில் 9 ஆண்டுகளாக வசித்து வந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் மீட்பு

பாதாள அறையில் 9 ஆண்டுகளாக வசித்து வந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் மீட்பு

நெதர்லாந்தில் பண்ணை வீடு ஒன்றின் பாதாள அறையில் பல ஆண்டுகளாக அடைப்பட்டிருந்த 6 இளைஞர்களையும் அவரது தந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர்.

அந்நாட்டின் ரூனர்வொல்ட் கிராமத்தில் பார் ஒன்றுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் வந்த இளைஞர் மீது சந்தேகமடைந்த பார் உரிமையாளர் விசாரித்தபோது தங்கள் ரகசிய அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மது போதையில் அந்த இளைஞர் உளறியுள்ளார். இது குறித்து பார் உரிமையாளர் கொடுத்த தகவலின்போரில் போலீஸ் விசாரணை நடத்தினர்.

அப்போது இளைஞர் கூறிய பண்ணை வீட்டில் பாதாள அறை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கு அடைபட்டிருந்த முதியவர் மற்றும் பாருக்கு வந்த இளைஞர் உள்பட 6 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பண்ணையில் விளைந்த பயிர்களை உண்டு 9 ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 58 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் தான் அவர்களை அடைத்து வைத்திருந்தாரா என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com