Monday , 20 November 2017
Home » தமிழ்நாடு » பாண்டிச்சேரி ; ப.ஜ.கவின் 3 நியமன ச.ம.உறுப்பினர்களின் நியமனம் செல்லாது …

பாண்டிச்சேரி ; ப.ஜ.கவின் 3 நியமன ச.ம.உறுப்பினர்களின் நியமனம் செல்லாது …

vaithiyalindamபாஜகவை சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரையும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்கள் மூன்று பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

இதனிடையே அவர்களுக்கு சட்டசபையில் அலுவலகம், அடையாள அட்டை மற்றும் பேரவையில் இருக்கை ஒதுக்க வேண்டுமென மனு அளித்து இருந்தனர்.

இந்நிலையில் வரும் 23-ம் தேதி சட்டசபை கூடவுள்ள சூழ்நிலையில்  சபாநாயகர் வைத்தியலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவை செயலர் வின்செண்ட் ராயர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜகவை சேர்ந்த 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செய்து வைத்தது செல்லாது என்றும். துணைநிலை ஆளுநர் செய்து வைத்த பதவிப்பிரமாணம் ஏற்கதக்கதல்ல என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com