Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » பாடத்திட்டத்தில் இருந்து தமிழக வரலாற்று தலைவர்களின் பாடங்களை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நீக்குகிறது!

பாடத்திட்டத்தில் இருந்து தமிழக வரலாற்று தலைவர்களின் பாடங்களை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நீக்குகிறது!

seeman 1பாடத்திட்டத்தில் இருந்து தமிழக வரலாற்று தலைவர்களின் பாடங்களை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நீக்குவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் ஓராண்டில் இருமுறை நீட் தேர்வு என்பது தேவையற்றது என தெரிவித்தார். வேலுநாச்சியார் வரலாற்றை பற்றி படிப்பதை விட்டு ஜான்சி-ராணி குறித்து படிக்க சொல்வதாகவும், வ.உ.சியை விட்டுவிட்டு, வல்லபாய்-பட்டேல் குறித்து படிக்கச் சொல்வதாகவும், தமிழக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் வரலாற்று தலைவர்களின் பாடங்களை நீக்குவது வேதனைக்குரியது என தெரிவித்தார். மொத்தத்தில் தமிழக வரலாற்றை அழிக்க மத்திய-மாநில அரசுகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய சீமான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்கைவிட குறைவாக பெற்றது தான் தமிழகத்தில் பா.ஜ.கவின் நிலை என்றும் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com