Monday , 23 July 2018
Home » உலகம் » பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சார , பொதுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சார , பொதுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு!

703698-pak-mastung-blastபாகிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், பலூசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் மிர் சிராஜ் ராய்ஸானியைக் குறிவைத்து கூட்டத்தில் புகுந்த தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 54 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com