Monday , 20 November 2017
Home » சினிமா » பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடந்திருந்தால் அதை நிச்சயம் எதிர் கொள்வேன் ; நடிகர் விஷால்…

பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடந்திருந்தால் அதை நிச்சயம் எதிர் கொள்வேன் ; நடிகர் விஷால்…

Vishalதனது அலுவலகத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடந்திருந்தால் அதை நிச்சயம் எதிர் கொள்வேன் என்று நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறையின் டி.டி.எஸ் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பின்னர், நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

வரிப்பிடித்தம் செய்ததில் 51 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்ற புகார் தொடர்பான விசாரணைக்கு, தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  ஆஜராகுமாறு அவருக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை  சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், தான் நேர்மையாக வருமான வரி செலுத்தி வருவதால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்றார். அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடைபெற்றால் அதனை சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com