Sunday , 16 December 2018
Home » இந்தியா » பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி!

4பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.
விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லி வந்தனர். ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து, தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ரெயில் நிலையத்தில் அரை நிர்வாணமாக மண்டை ஓடு ஏந்தி கோஷமிட்டுவாறு பிளாட்பாரத்தில் அணி வகுத்து சென்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டதால் டெல்லி மாநகரம் ஸ்தம்பித்தது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையில், விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்ல முடிவு செய்து உள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com