Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » பல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

பல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

stalinபல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதுடன், ஆளுநரை சந்தித்து மனு அளிப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைகழங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாகவும், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் குறித்து வெளியிட்டுள்ள ஆளுநர், நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையாக உள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com