Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பரவலாக பெய்யும் மழை.. குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » பரவலாக பெய்யும் மழை.. குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி

பரவலாக பெய்யும் மழை.. குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலையில் மழை நீர் ஓடியது. இதேபோல் சேலையூர், முடிச்சூர், கேம்ப் ரோடு, மாடம்பாக்கம், செம்பாக்கம், பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர்

கடலூரில் இன்று காலை முதல் கன மழை பெய்துவருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை

நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, நெய்விளக்கு, தேத்தாகுடி தோப்புதுறை செம்போடை கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.
இந்த மழையால் சாம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

மெயின் அருவியில் அதிகாலையில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் காலை 10 மணிக்கு மேல் நீர்வரத்து சீரானதால் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் சீராக தண்ணீர் கொட்டுவதால் குளிக்க அனுமதிக்கப்படுகிறது.

ராஜபாளையம்

கனமழையால் ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தாகோவில் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கபப்ட்டுள்ளது. ராஜபாளையத்தை ஒட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சாஸ்தா கோவில் ஆற்றுப்பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றுப்பகுதியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அதிலிருந்து இருந்து தண்ணீர் திறந்து விடப்படப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com