Thursday , 16 August 2018
Home » இந்தியா » பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

picநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து, அனைத்துக் கட்சிகளுடன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பங்கேற்க உள்ளனர். அதில், அவையை சமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு சுமித்ரா மகாஜன் எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளார். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், வங்கி மோசடிகள், பெண்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி பாஜக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்கவும் எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க் கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com