Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் முதலமைச்சர் பழனிசாமி!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் முதலமைச்சர் பழனிசாமி!

palanisamy-24-1503517768பரபரப்பான அரசியல் சூழ்நிiலையில் பிரதமர் நரேந்திரமோடியை, நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முதலமைச்சர் பழனிசாமி கடந்த மாதம் 30-ஆம்; தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், பிரதமரை சந்திக்க நாளை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் தொடர்பாகவும் இந்த சந்திப்பு இருக்கும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி குறித்தும் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com