Thursday , 18 October 2018
Home » இந்தியா » பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி

பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி

ms-dhoni1-13-1522686852-304566-khaskhabarஇந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதற்கான, விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அதில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் ஸ்னூக்கர் வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இதில்,  இந்திய அணியின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனி ஏப்ரல் 2ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். ராணுவ சீருடையில் வந்த தோனிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தார்.

அப்போது, மனைவி சாக்‌ஷியும் நேரில் வந்திருந்தார். ஏப்ரல் 2ஆம் தேதி 2011 உலகக்கோப்பையை ஏப்ரல் 2ஆம் தேதி தோனி தலைமையிலான இந்திய படை கையில் ஏந்தியது. இதன்மூலம், 1983ஆம் ஆண்டு அதாவது 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் தோனி படைத்தார். உலகக்கோப்பையை வென்ற தினத்தில், பத்ம பூஷண் விருதையும் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com