Monday , 25 October 2021
Home » மாவட்டம் » ஈரோடு » பட்டிக்குள் புகுந்து ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை

பட்டிக்குள் புகுந்து ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பட்டிக்குள் இருந்த ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை உடனடியாக பிடிக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசுவபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான 5 வெள்ளாடுகள் வழக்கம்போல் வீட்டின் அருகே உள்ள பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்கவே பட்டிக்கு சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர், அங்கு சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் கூச்சலிடவே, 2 ஆடுகள் இறந்த நிலையில், ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com