Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பட்டம் பெறும் மாணவர்கள் ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » திண்டுக்கல் » பட்டம் பெறும் மாணவர்கள் ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும்

பட்டம் பெறும் மாணவர்கள் ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும்

vlcsnap-2015-03-02-10h29m41s201பட்டம் பெறும் மாணவர்கள் ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்று, இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகளின் மலேசிய சிறப்பு தூதர் டாத்தோ உத்தாமாசாமிவேலு தெரிவித்தார்.
தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக 22-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் வீரமணி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகளின் மலேசிய சிறப்புத்தூதர் டாத்தோ உத்தாமாசாமிவேலு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புறையாற்றினார். அப்போது, சமூக பொருளாதார வாழ்வில் ஓரளவு வளர்ச்சி இருந்தாலும் நகர்புற வசதியில் சில குறைபாடுகள் உள்ளன. வாழ்வதற்கும், பயிலுவதற்கும் ஏற்ற தூய்மையான இடங்களாகவும், நகர்புறங்கள் திகழ வேண்டும். வளர்ந்து வரும் இணையதள உலகத்தில் எந்திரங்களை செம்மையாக பயன்படுத்தி கருத்து பரிமாற்றத்தை அடைய முடியும். இத்தகைய அறிவியல் நுட்பத்தை வேளாண்மை, மின்னாற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், பட்டம் பெறும் மாணவர்கள் ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதில் துணைவேந்தர் ராமச்சந்திரன், இணை வேந்தர் கண்ணப்பன், பல்கலைக்கழக வேந்தர் வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com