Thursday , 16 August 2018
Home » சினிமா » படக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குகின்றனர் ; அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் …

படக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குகின்றனர் ; அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் …

படங்களை உருவாக்குவபவர்களே  வெளியாகும் முன்பு சர்ச்சையை உருவாக்குகின்றனர் என தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

smiriti irani in FICCI 2018மும்பையில் நடந்த ஃப்ரேம்ஸ் 2018 என்ற நிகழ்ச்சியில் ஸ்மிருதி இரானி சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். இதில் திரைப்பட இயக்குனர் கரன் ஜோகருடன் நடைப்பெற்ற கேள்வி நேரத்தில் , திரைப்படங்களை உருவாக்கும் படக்குழுவினரே படத்திற்கான சர்ச்சையை உருவாக்குவதாக கூறினார் ஸ்மிருதி. மேலும், ”இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்கி அனைவரின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர் . ஏனென்றால் அவர்களுக்கு நாம் நல்ல படங்களை எடுப்பதில்லை என தெரியும். எனவே, இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்கி வெற்றிப் பெற முயற்சிக்கின்றனர்” என்றார் ஸ்மிருதி இரானி. பத்மாவத் திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் குறித்து கேட்டப்போது இந்த பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com