Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை உத்திர பிரதேசத்தில் பதற்றம்!!

பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை உத்திர பிரதேசத்தில் பதற்றம்!!

2உத்தரபிரதேசத்தில் பசுக்கள் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த நடைபெற்ற வன்முறையில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் அருகே புலந்த்ஷாரில் சட்டவிரோத பசுவதைக் கூடம் செயல்படுவதாக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போது சிலர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர்.வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் என்பவருக்கு மண்டை உடைந்தது. உடனே மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரத்தம் அதிகம் வெளியேறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அமைதியை திரும்பும் நோக்கில் அந்தக் கிராமத்தில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com