செங்கம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் கல்லை பிடுங்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் சென்னை – சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் பணியில் நில அளவை செய்யும் பணி தற்போது செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நில அளவையர்கள் நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் நில அளவியர்களின் கையிலிருந்த டேப்பை பிடிங்கி எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் நில அளவை செய்யும் பணியினை நிறுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Home » மாவட்டம் » திருவண்ணாமலை » பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு! பெண்கள் கல்லை பிடுங்கி எறிந்து வாக்குவாதம்