Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » நீலகிரி » நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி

vlcsnap-2015-03-23-16h44m17s208நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தனியாருக்குச்சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் விஜயகுமாரி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர், தனக்காக ஒதுக்கப்பட்ட கலர் செட்டர் எனும் இயந்திரத்தை இயக்கினார். அப்போது, இயந்திரம் இயங்காததால், மீண்டும் அதனை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் அதன் அருகில் சென்று தேயிலை பணிகளை மேற்கொண்டார். அப்போது, அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி உள்ளே இழுத்துச்செல்லப்பட்டார். பின்னர் விஜயகுமாரியின் அலறல் சப்தம் கேட்டு விரைந்து வந்த சகதொழிலாளர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது. அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் உயிரிழந்த விஜயகுமாரிக்கு நிர்வாகம் ரூபாய் 10-லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது மகனின் படிப்பிற்கான முழு தொகையையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி;யில் பரபரப்பு நிலவியது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com