Monday , 23 October 2017
Home » தமிழ்நாடு » நீட் தேர்வு வழக்கு விசாரணையில் அலட்சியம் காட்டிய சுகாதாரத்துறை …

நீட் தேர்வு வழக்கு விசாரணையில் அலட்சியம் காட்டிய சுகாதாரத்துறை …

parlimentநீட்டிலிருந்து விலக்கு கோரி அவசரச் சட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் படித்து பார்க்காமலேயே நிராகரித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அவசரச் சட்டத்தை ஏற்று தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அந்த சூழலில் தமிழக அரசின் அவசரச் சட்டம் மீது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கே.கே.வேணுகோபாலிடம் கருத்து கேட்டிருந்தது.

அப்போது தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கக்கூடாது என தனது நிலைப்பாட்டை அவர் ஆகஸ்ட் 21-ம் தேதி மாற்றிக்கொண்டார். அதற்கு அடுத்த நாள் அவரது கருத்தை ஏற்று தமிழகம் உட்பட எந்த மாநிலத்திற்கும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதியில் தான் நீட்டிலிருந்து விலக்கு கோரும் அவசரச் சட்டத்தின் நகலை உள்துறை அமைச்சகத்திடம் பெற்றதாக மத்திய சுகாதாரத்துறை தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால் அதற்கு இருநாட்கள் முன்னதாகவே சுகாதாரத்துறை அளித்த கூடுதல் விவரங்கள் மூலம் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்ததாக கே.கே.வேணுகோபால் தெரிவித்தது எப்படி என சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான அவரச் சட்டம் தொடர்பான எந்தவிதமான ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதனால் படித்து பார்க்காமலேயே அவசரச் சட்டம் நிராகரிக்கப்பட்டதாகவும் தமிழக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com