Tuesday , 30 November 2021
Home » தமிழ்நாடு » நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது அல்ல!

நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது அல்ல!

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
nmமத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல என்று கூறினார். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று கூறிய அவர் ஏழைகள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தலித் சகோதர சகோதரிகள் என அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், முந்தைய அரசு கொண்டு வந்த சட்டத்தில் மருத்துவமனை, பள்ளி, சாலை, வீடு போன்ற வசதிகளை செய்து தருவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறிய பிரதமர் மோடி, அந்த வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்றார். அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையை ஒளி மயமானதாக மாற்ற மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நரேந்திர மோடி மின் சக்தி இல்லாமல் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com