Sunday , 22 July 2018
Home » தமிழ்நாடு » நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

MA18-NIRMALADEVIjpgவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கலை கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவர் நிர்மலாதேவி. இவர், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரல் மாதிரி பரிசோதனைக்காக நிர்மலா தேவியை காவல்துறையினர் அண்மையில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றபத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com