Thursday , 20 September 2018
Home » இந்தியா » நிதிஷூக்கு அம்பு சின்னம் ; தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு …

நிதிஷூக்கு அம்பு சின்னம் ; தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு …

Patna: Bihar Chief Minister Nitish Kumar speaking to media during Lok Samvad programme at 1 Anne Marg, in Patna on Monday. PTI Photo(PTI7_3_2017_000020A)

நிதிஷூக்கு அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம்  ஒதுக்கியுள்ளது.

பீகாரில், பா.ஜ.க. உடன் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்ததற்கு ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். மேலும், கூட்டணிக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வந்ததையடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கட்சியின் அம்பு சின்னத்திற்கு உரிமை கேட்டு தேர்தல் ஆணையத்தில் சரத் யாதவ் மனு அளித்தார். இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், நிதிஷ் குமார் தலைமையில் உள்ள அணியே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் அம்பு சின்னம் அவருக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், கட்சியின் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை அவருக்கு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com