Friday , 16 November 2018
Home » இந்தியா » நாளை சபரிமலையில் நடை திறப்பு! தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை!!

நாளை சபரிமலையில் நடை திறப்பு! தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை!!

4சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், கேரள அரசு இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சுத்தி பூஜைக்கு பிறகு மறுநாள் 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது திருப்திதேசாய் போன்ற பெண் ஆர்வலர்கள் கோவிலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், ஐயப்ப பக்தர்களை சமரச படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பத்தினர் ஆகியோரை இன்றைய பேச்சு வார்த்தைக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைத்துள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com