Friday , 16 November 2018
Home » இந்தியா » நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற,இளைஞர்கள் முன்வர வேண்டும்! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற,இளைஞர்கள் முன்வர வேண்டும்! குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Ram-Nath-Kovindநாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற இளைஞர்கள் முன்வர வேண்டுமென குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார். அவர் பேசும்போது, ஆகஸ்ட் 15ம் தேதி ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான நாள். நம்முடைய மூவர்ணக் கொடி தான் நமது நாட்டின் அடையாளம் என்றும், நம்முடைய முன்னோர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளால் தான் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமானது என்று தெரிவித்தார். மகளிருக்கு அதிகாரம் வழங்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அரசுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் நாட்டு முன்னேற்றத்தில் பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தை வழங்குவதன் மூலம் உணவு பொருள் உற்பத்தியை பெருக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட உறுதி ஏற்க வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com