Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில், பிளாட்பாரம் கட்டணம் இரு மடங்கு உயர்வு! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » முக்கிய செய்திகள்: » நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில், பிளாட்பாரம் கட்டணம் இரு மடங்கு உயர்வு!

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில், பிளாட்பாரம் கட்டணம் இரு மடங்கு உயர்வு!

trainநாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 1–ந்தேதி முதல் உயருகிறது.
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, ரயிலில் பயணம் மேற்கொள்வோர் தங்கள் பயணச்சீட்டுகளை 60 நாள்களுக்கு முன்னர் பதிவு செய்து வருகின்றனர். இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகளுக்கும் முன்பதிவு வசதி கிடைக்கவும் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. ரயில் நிலையத்தில் நுழைந்த 5 நிமிடங்களுக்குள் பயணச் சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயணச் சீட்டு எடுப்பதற்கான நேரத்தைக் குறைக்க ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் விரைவில் நிறுவப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 1–ந்தேதி முதல் உயருகிறது. நபர் ஒருவருக்கு ரூபாய் 5–ல் இருந்து ரூபாய் 10 ஆக கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர், பண்டிகை மற்றும் பொதுக்கூட்ட காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 10 ரூபாய்க்கு மேல், பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com