Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கட்சி வெற்றி பெறும்!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கட்சி வெற்றி பெறும்!

1அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல என்றும் எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார். இன்று அவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது. ஆனால் ஜி.எஸ்.டி. வரிக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்று தெரிவித்தார். அ.தி.மு.க.வை பார்த்து அணையும் விளக்கு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளதற்கு பதில் அளித்த தம்பிதுறை, அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல என்றும், எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட வாராண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு என்று தெரிவித்தார்.
மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கட்சி போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com