Thursday , 20 September 2018
Home » இந்தியா » நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமில்லை

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமில்லை

om-prakash-rawatநாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது இப்போதைக்கு சாத்தியமல்ல என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்த சட்டரீதியான அங்கீகாரம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். இப்போது உள்ள சட்டமன்றங்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதோ அல்லது குறைப்பதோ அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதில், யாருக்கு ஓட்டளித்தோம் என்ற சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கோரிக்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் தனது கருத்தைத் தெரிவித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com