Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை மிஞ்சும் – ஐநா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » வணிகம் » நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை மிஞ்சும் – ஐநா

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை மிஞ்சும் – ஐநா

unநடப்பு நிதி ஆண்டில் (2015-16) பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை  மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2016-ம் ஆண்டில் 7.7 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்படும் வளர்ச்சியானது தெற்காசிய பிராந்திய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றும் குறிப்பிட் டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வளம் குறித்த மத்திய கால அறிக்கை நேற்று வெளியானது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.6 சதவீத மாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு (2016) 7.7 சதவீதமாக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அப்போது வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

நடப்பாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும் அடுத்த ஆண்டில் 6.8 சதவீதமாக சரியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெற்காசி யாவில் பொருளாதார வளர்ச்சி மிகவும் சாதகமாக உள்ளதாக வும், இப்பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் வளர்ச் சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு தேவை அதிகரிப்பு, முதலீடுகள் குவிவது, ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியன வளர்ச்சிக்குக் காரணமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் திருத்திய மதிப்பீட்டின்படி ஜி.டி.பி. 6.7 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் மதிப் பிடப்பட்டுள்ளது. 2014- ஆண்டு இப்பிராந்திய வளர்ச்சி 6.3 சதவீத அளவுக்கு இருக்கும் என மதிப் பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக் கது. இந்தியாவில் காணப்படும் அதிகபட்ச வளர்ச்சியே இதற்குக் காரணம் என அறிக்கை தெரிவிக் கிறது.

பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளிலும் ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் நுகர்வு அதிகரிப்பதோடு முதலீடுகளும் படிப்படியாக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் துறை தேவை அதிகரிக்கும் அதே வேளையில் பேரியல் பொருளாதார சூழல் மற்றும் குறைந்த பணவீக்கம் நிலவும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

2015-ம் ஆண்டில் சர்வதேச அளவிலான நுகர்வோர் பணவீக்கம் 2.5 சதவீதமாக இருக்கும் என்றும் இது 2009-ம் ஆண்டு இருந்ததை விட மிக குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் 2016-ல் சர்வதேச அளவிலான பணவீக்கம் 3 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

சராசரியாக இப்பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்துள்ளது. இதற்கு கச்சா எண்ணெய் விலை சரிவும் முக்கிய காரணமாகும்.

இதனால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பெடரல் வங்கியின் நிதிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலெழுந்த வாரியாக இப்பிராந்தியத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்த போதிலும் நீண்ட கால அடிப்படையில் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். குறிப்பாக மின் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதி குறைபாடு, அரசியல் ஸ்திரமற்ற சூழல், சமூக ரீதியில் அமைதியற்ற நிலையும் சவாலாக இருக்கும் என்ற அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை எட்டும் என்றும் ஐ.நா அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com